பிக்பாஸை கழுவி ஊற்றி வசமாக சிக்கிய அபிஷேக்..! – வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் மரண கலாய்..!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது மிக பிரம்மாண்டமாக முறையில் தொடங்கியது. முந்தைய சீசன்களை போல இந்த முறையும் பிக் பாஸ் வீட்டை கமல் சுற்றி காட்டினார்.

கடந்த வருடத்தை போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸ் வீடு மிக பெரிதாகவே இருக்கிறது. பெரிய பெட்ரூம், லிவிங் ஏரியா என பெரிதாகவே இருக்கிறது.

இந்த நிலையில், அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், கமல் குறித்தும் வாய்க்கு வந்தபடி பேசிய பழைய வீடியோவை நெட்டிசன்கள் தேடி எடுத்து அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவில், ஊருக்கே தெரியும் உங்கள கேமரா வச்சி எடுத்துக்கிட்டு இருக்காங்கனு, ஆனால் கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு CM ஆகணும்னு நீ பண்ற வேலை இருக்கே முடியலடா என்று பேசி இருக்கிறார்.

இதனால், இவரை மரணமாக கலாய்த்து வரும் நெட்டிசன்ஸ் இந்த வீடியோ கமல் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் என்றும், தம்பி முதல் ஆளா எவிக்ஷன் ஆகிவாப்பா என்றும் அவரை கலாய்த்து வருகின்றனர். இணையத்தில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.