பிக்பாஸில் முதல்நாளே டார்கெட் செய்யப்பட்ட ஷிவானி.. சோகமயமாக வெளியான இரண்டாவது நாள் ப்ரோமோ..

கொரோனா என்ற பெரிய போராட்டத்திற்கு நடுவில் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய பேச்சு தான் மக்களிடம் அதிகம். கடந்த மூன்று சீன்களை போலவே இந்த பிக் பாஸ் சீசன் 4 உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். ரசிகர்கள் எதிர்ப்பார்த்த பிரபலங்கள் நிகழ்ச்சியில் இருப்பதால் அவர்களுக்கு கொண்டாட்டம் தான். இதில் ரியோ ராஜ், நடிகை ரேகா, செய்தி வாசிப்பாளர் அனிதா, சீரியல் நடிகர் ஷிவானி, பின்னணி பாடகர் வேல் முருகன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முதல் நாள் ஆட்டம் பாட்டத்துடன் வந்து புரொமோக்கள் பார்த்து ரசிகர்களும் கொண்டாடினார்கள். ஆனால் இன்று வந்துள்ள புதிய புரொமோ சோக மயமாக உள்ளது. இதில் நடிகை ஷிவானியை சில விஷயங்களுக்காக ஒட்டுமொத்த போட்டியாளர்களும் டார்கெட் செய்வது போன்று நேற்றைய தினத்தில் நடந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆரி, பாலா, சோம் இவர்கள் ஷிவானிக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

இதில் ஆரி நீங்கள் உங்களது இன்ஸ்டா பக்கத்தில் காணொளி வெளியிடுவது ஏன்?. என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சோம் கூறுகையில் உங்களது ரசிகர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்றும் ஆறுதல் கூறியபடி ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதோ அந்த புரொமோ…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!