தமிழில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் சீசன் இந்த முறை ஆரம்பத்தில், ஏனோ தானோ என்று சென்று கொண்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் தொடர் தான், ஐபிஎல்லும், பிக்பாஸும் ஒரே நேரத்தில் வந்ததால், மக்கள் பிக்பாஸ் மீது கவனம் செலுத்தவில்லை. இதுவே பிக்பாஸ் மீது மக்கள் ஆர்வம் குறைந்ததற்கு காரணம் என்று கூறப்பட்டது. அதன் பின் தற்போது ஆரி, பாலாவை வைத்து பிக்பாஸ் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
ஆரி ஒரு அணியாக, தற்போது இருக்கும் ரியோ, ரம்யா பாண்டியன், சோம், ஷிவானி போன்றோர் ஒரு அணியாக இருப்பது போன்று உள்ளது. இருப்பினும் ஆரிக்கே மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பெண் போட்டியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு கொடுக்கப்படும் சம்பளம்
ரேகா(நாள் ஒன்றிற்கு 1,00,000 ரூபாய்), ஷனம் செட்டி(நாள் ஒன்றிற்கு 1,00,000 ரூபாய்), சுசித்ரா(நாள் ஒன்றிற்கு 80,000 ரூபாய்), ரம்யாபாண்டியன்(நாள் ஒன்றிற்கு 75,000 ரூபாய்), கேப்ரில்லா(நாள் ஒன்றிற்கு 70,000 ரூபாய்), சம்யுக்தா(நாள் ஒன்றிற்கு 40,000 ரூபாய்), அறந்தாங்கி நிஷா(நாள் ஒன்றிற்கு 40,000 ரூபாய்), விஜே அர்ச்சனா(நாள் ஒன்றிற்கு 75,000 ரூபாய்), ஷிவானி(நாள் ஒன்றிற்கு 60,000 ரூபாய்), அனிதா சம்பத்(நாள் ஒன்றிற்கு 40,000 ரூபாய்).