ஷிரின் ஒரு இந்திய நடிகை, இவர் கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களில் அறிமுகமான பிறகு, ஷெரின் நடிகர் தனுஷ்யுடன் இணைந்து துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததைத் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றார், பின்னர் விசில் என்ற திகில் படங்களில் நடித்தார். அவர் பிக் பாஸ் தமிழ் 3 ரியாலிட்டி ஷோவின் இறுதிப் போட்டியாளர் ஆவார்.
மேலும் அவர் பிக் பாஸ் சீசன் 3யில் 3வது ரன்னர் அப் ஆவார். நடிகை ஷெரின் பிக்பாஸ் போட்டிக்கு பின் எடையை குறைத்து, சமூக வலைத்தள பக்கத்தில் அன்றாடம் ஏதாவது புகைப்படம் அல்லது வீடியோ என பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் உடல் பருமனாக இருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது மீண்டும் உடல் எடை குறைத்து இளமையான தோற்றத்துக்கு திரும்பினார் ஷெரின்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அணிந்த ஒரு உடையை இருந்த ஓராண்டிற்கு பின்னர் அணிந்து அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த ஒரு வருடத்தில் 10 கிலோ குறைத்துள்ளதாகவும் கூறியுள்ளார் ஷெரின்.