தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசனின் முன்னிலையில் மிகவும் பிரமாண்டமாக துவங்கவிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் இதுவரை வெற்றிகரமாக மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மூன்று சீசன்களை முடித்த பிரபல ரிவியில் தற்போது நான்காவது சீசனை தொடக்கவுள்ளது.
இதன் ப்ரொமோக்கள் சமீப நாட்களாக வெளியாகிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான்காவது சீசன் துவங்கும் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி மேடையில் விஜய் தொலைக்காட்சி புதிதாக தங்களது இசை தொலைக்காட்சியையும் அறிமுகம் செய்ய உள்ளனர். ரசிகர்கள் இன்னும் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர், காரணம் கடந்த சில மாதங்களாகவே பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள் தான் என பல செய்திகள் வந்தன, ஆனாலும் இன்னும் பெரிய குழப்பத்தில் தான் ரசிகர்கள் உள்ளார்கள்.
ரசிகர்களும் போட்டியாளர்கள் லிஸ்ட் பார்த்து சந்தோஷம் அடைந்து வந்தனர். தற்போது பிரபல நாயகியான காயத்ரி தனது டுவிட்டரில் உண்மையை கூறி விடுகிறேன், நான் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துகொள்ளவில்லை என டுவிட் செய்துள்ளார். இதனால் அவர் நிகழ்ச்சியில் இல்லையா என ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.