பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு தங்கையாக நடித்த நடிகையா இது..? தற்போது எப்படியுள்ளார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகர் ஆர்யா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் பாஸ் என்ற பாஸ்கரன். இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத் திருந்தார் படத்தை ஆர்யா மற்றும் ஸ்ரீனிவாசன் தயாரித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்த திரைப்படத்தில் சந்தானம் தன்னுடைய மிரட்டலான காமெடியை வெளிப்படுத்தி இருந்தார்.

அதனால் சந்தானத்திற்கு சிறந்த காமெடி நடிகருக்கான விருது கிடைத்தது. மேலும் இந்த திரைப்படத்தில் லட்சுமி ராமகி ருஷ்ணன், ஷகிலா, சுவாமி நாதன், விஜயலட்சுமி மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

 

மேலும் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நித்யா என்ற கதாபாத்திரத்தில்   நடித்தவர் நடிகை மோனிஷா. இவரை அந்த திரைப்படத்தில் பார்த்த பொழுது பலருக்கு இவரை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது என்ற எண்ணம் வரும்.

அதற்கு காரணம் பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்திற்கு முன்பாகவே தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பாஸ் என்கின்ற பாஸ்கரன் திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்காத மோனிஷா.

தற்போதைய கேம் ஷோக்கள் பிரபலங்களின் விழாக்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இறுதியாக ஜெயா டிவியில் ஒளிபரப்பான கில்லாடி ராணி என்றும் கேம் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவருக்கு தற்போது திருமணம் கூட முடிந்து விட்டது. இதோ அவரின் கணவர் புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.