பாவாடை தாவணியில் புகைப்படத்தை வெளியிட்ட லொஸ்லியா! தந்தை மறைந்த சோகத்தில் கூறியது என்ன தெரியுமா?

இலங்கையில் செய்தி வசிப்பவராக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மிகவும் தமிழ் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை லொஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் நடிகை லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. கனடாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த லொஸ்லியாவின் தந்தையின் உடல் கொரோனா பிரச்சினை காரணமாக ஒரு மாதம் கழித்து அவரது தாய்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி இருந்தனர். தனது தந்தையின் இழப்பால் பெரும் சோகத்தில் இருந்து வந்தார் லாஸ்லியா.

தனது தந்தையின் இறப்பிற்கு பின்னர் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது பொங்கல் தினத்திற்கு கொண்டாட்டம் எதுவும் இல்லாமல் முன்பு எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு, யார் என்ன சொன்னாலும், உங்களை நம்புவதை விட்டுவிடாதீர்கள் என்று கருத்து கூறியுள்ளார். இந்த பதிவிற்கு லொஸ்லியாவின் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.