மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார் நடிகை சாய் பல்லவி. நடிகை சாய் பல்லவி பிரபல தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இறுதி வரை டைட்டில் ஜெயிக்க போராடினார். முதன் முதலில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தியா எனும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தியா படத்தை தொடர்ந்த தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே, என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இடையில் தன்னுடைய படிப்பிலும் அக்கறை காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவரை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்கின்றனர்.
சமீபத்தில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தாவணி, பாவாடையில் இவர் ஆடியிருக்கும் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக டான்ஸை விட அவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள் மனதை கொள்ளை கொள்வதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகைகளுக்கே சவால் விடும் அளவு உள்ளது.