‘பாவம் கணேசன்’ சீரியல் நாயகன் நவீனின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? வெளியான குடும்ப புகைப்படம் இதோ..

விஜய் டிவி-யில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இவற்றில் சில சீரியல்கள் கடந்த ஆண்டு போடப்பட்டிருந்த கொரோனா லாக்டவுனிற்கு பிறகு ஒளிபரப்பாக துவங்கியவை. அந்த வகையில் பாவம் கணேசன் சீரியல் கடந்த சில மாதங்களாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. தன் சந்தோஷத்தை மறந்து குடும்பத்திற்கென்றே வாழும், உழைக்கும் இளைஞன் பற்றிய கத்தி தான் “பாவம் கணேசன்”. விஜய் டிவி-யின் கலக்கப் போவது யாரு புகழ் நவீன்,

இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஒளிபரப்பாக துவங்கியதில் இருந்து ஏராளமான முறை நேர மாற்றங்களை சந்தித்து விட்டது. விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகர் நவீன். அதன்பிறகு நிறைய சின்ன நிகழ்ச்சிகள்,

தனியார் நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டு மிமிக்ரி செய்து கலக்கி வந்தார். இப்போது இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. பாவம் கணேசன் என்ற சீரியலில் நடித்து வருகிறார். தற்போது இவரது நிஜ குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அவரது மனைவி மற்றும் அழகிய குழந்தையின் புகைப்படம்…