பாலிவுட் நடிகர் சுஷாந்த் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னர், சுஷாந்த் சிங்கின் தந்தை, சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரபோர்த்தி மீது புகார் அளித்தார்.

அதனைத்தொடர்ந்து ரியா மற்றும் சிலர் சுஷாந்த் சிங்கிற்கு மன ரீதியாக தொல்லைக் கொடுத்ததாகவும் சுஷாந்த் சிங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 15 கோடி ரூபாயை பணம் எடுத்து அதனை வேறு ஒருவர் கணக்கில் மாற்றியதாகவும் புகார் அளித்தார். இந்நிலையில் ரியா சக்ரபோர்த்தி மீது பாட்னா போலீஸார் சுஷாந்த் தந்தை அளித்த புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பீகார் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. மத்திய அரசும் சிபிஐ விசாரணைக்கு அனுமதியளித்தது. இந்நிலையில் இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி சுஷாந்த் வழக்கு தொடர்பாக சிபிஐ ரியா சக்ரபோர்த்தி, சாமுவேல் மிராண்டா, ஸ்ருதி மோடி உள்ளிட்ட சிலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.