பாலிவுட் நடிகர் சுஷாந்தின் காதலி ரியா தலைமறைவு… தீவிர விசாரணை.. தேடுதலில் பொலிசார்..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது மற்றும் அவர்களது ரசிகர்களிடையே ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தாலும் தனக்கு வந்த படவாய்ப்புகளை அவர்கள் தடுத்ததாலும் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமார் 40 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று உள்ளனர்.

இதற்கு மத்தியில் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காதலி ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என ரசிகர்கள் பலர் வலைதளத்தில் வறுத்தெடுத்தனர். இந்நிலையில், தற்போது சுஷாந்த் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா மீது புகார் அளித்துள்ளார். அதில், ரியா தற்கொலைக்கு தூண்டியதாகவும், பொருளாதாரரீதியாக அவரை ஏமாற்றி விட்டதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே சுஷாந்த தற்கொலை விவகாரத்தில் ரியாவிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள பாட்னா ராஜீவ் நகர் போலீசார் ரியாவை கைது செய்வதற்காக மும்பை விரைந்துள்ளனர். இந்நிலையில் மும்பையில் உள்ள ரியாவில் வீட்டுக்கு சென்றபோது அவரை காணாததால் ரியா தலைமறைவாகி இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.