பாலியல் அழகியால் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்ட நபர்: 2 லட்சம் மற்றும் கார் அபேஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (40) என்பவர் தன்னுடைய மனைவியை பிரிந்து சென்னையில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது புரோக்கராக பணிபுரிந்து வரும் சீனு என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் மூலம், சீனுவின் சொந்தக்காரன் பையனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, சக்திவேல் ரூ.2 லட்சம் லஞ்சமாக வாங்கியுள்ளார். ஆனால் 4 மாதம் ஆகியும் வேலை வாங்கித்தரவில்லை. இதனால் சீனு பெரும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த சமயத்தில் போன் செய்த சக்திவேல், தனிமையில் இருக்க பெண் வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த சீனு, சுவேதா என்கிற பெண்ணை ஏற்பாடு செய்து அனுப்பியிருக்கிறார். சுவேதாவை தன்னுடைய காரில் அழைத்துக்கொண்ட சக்திவேல் தனியார் விடுதிக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது பாத்ரூம் உள்ளே சென்ற சக்திவேலை, சுவேதா வெளிப்பக்கத்தில் தாழ்பாள் போட்டுவிட்டு, அங்கிருந்த ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, காரில் தப்பி சென்றுள்ளார்.

நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த சக்திவேல் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சக்திவேலை மீட்டு வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், சுவேதா திருப்பதிக்கு தப்பி செல்வது தெரியவந்தது. இந்த நிலையில், சீனு மற்றும் சுவேதாவை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.