பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 88 நாட்களை கடந்து இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவடைய போகிறது. இதனையடுத்து, ரசிகர்கள் மத்தியில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போகிறார்கள் என காத்திருக்கின்றனர். அதற்காக போட்டியாளர்களும் தற்போது அடித்துக்கொள்ளும் அளவிற்கு சுயநலமாகவும் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் பாலா மற்றும் ஆரி இடையே பெரிய வாக்குவாதமே ஏற்பட்டது.
தற்போது இன்றைக்கான நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ காட்சியில், பாலா ஆரியை மீண்டும் காதல் கண் கட்டுதே சொன்னீங்க அத பாத்தீங்களா? என கேட்கிறார். அதற்கு கடுப்பான ஆரி, இதை அவங்க அம்மாட்ட நீங்க போய் பேசி இருக்கணும் என கூற, அதற்கு பாலா நீங்க வெளியே இருந்தா நான் கொடுக்குற மரியாதையே வேற என பேசுகிறார்.
அதன் பின்னர், ஷிவானி டாப்பிக்க ஏன் எடுக்கிற ஆரி பேச, பாலா மீண்டும் ஷிவானி டாப்பிக்க விடியா என கத்தி தலைகாணியை தூக்கி எறிகிறார். முதல் ப்ரொமோவில் பாலா பயங்கர கோபமாகவும், பாலாவிற்கு ஆதரவாக ரம்யா ஆரியை முகத்தில் அடித்தது போன்று பேசியதை கமல் விமர்சித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஆரியின் நேர்மை, பாலாவின் கோபம், ரம்யாவின் நக்கல் பேச்சு என அனைத்தையும் கமல் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.