பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல் இதோ..

சமீபகாலமாக சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றது. சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம் என பலவற்றை கூறி கொண்டே போகலாம்.

இதில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் பிரபலமான ஒன்று பாரதி கண்ணம்மா. தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் தான் டிஆர்பியில் மிகவும் முன்னிலையில், மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆம் கண்ணம்மா தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறி நடந்து கொண்டே இருப்பதை வைத்து நாளுக்கு நாள் மீம்ஸ்கள் பல வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ.. { பாரதி } அருண் பிரசாத் – ரூ.20,000, { கண்ணம்மா } ரோஷினி – ரூ. 20,000, அகிலன் – ரூ. 15,000, அஞ்சலி – ரூ. 15,000, { அம்மா } ரூபா ஸ்ரீ – ரூ.10,000, { அப்பா } ரிஷி – ரூ. 10,000.

Leave a Reply

Your email address will not be published.