‘பாபநா சம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்த நடிகையின் மகளை பார்த்திருக்கிறீர்களா.. இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம்..

சினிமா துறையில் நடிப்பில் சிறந்து விளங்கும் நடிகராக பலரால் பாராட்டு பெற்று மற்றும் எந்த ஒரு கதாபாத்திரம் எடுத்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிகட்டுவார்.அதேபோல் இவர் சினிமா துறையில் அதாவது ஒரு படத்தில் என்ன என்ன தேவையோ அதை அனைத்தையும் தான் ஒருவராகவே செய்து காட்டுபவர்.அவர் தான் உலக நாயகன் கமல் ஹாசன் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் திக்கு முக்கு ஆட செய்வார்.இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்தும் மற்றும் இயக்கியும் உள்ளார்.மேலும் நடிகர் கமல் ஹாசன் அவர்கள் நடித்து வெளியான படம் தான் பாபநாசம்.

2015ஆம் ஆண்டு வெளியான இப்படம் மலையாள சினிமா துறையில் மெகாஹிட் ஆனா படமான த்ரிஷியம் படத்தின் ரீமேகில் நடித்தார். அவரது அழகிய குடும்பத்திற்கும், அந்த ஊருக்கும் உத்தம நாயகனாக தெரியும் கமல், போலீஸ்க்கு உத்தம வில்லனாகிறார்! ஆனாலும், பாவங்களை கழுவும் இடம் பாபநாசம் என்பதாலும், இப்படத்தின் கதைக்களமும் பாபநாசம் என்பதாலும் பாபநாசம் டைட்டிலும் படத்திற்கு பக்காவாக பொருந்துகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில், கேபிள் டிவி நெட்வொர்க் உள்ளிட்ட பிஸினஸ்களை செய்யும் சுயம்புலிங்கம் எனும் கமலுடைய குடும்பம். அழகிய மனைவி ராணி எனும் கௌதமி, அழகிய இரண்டு மகள்கள் என அளவான குடும்பம். ஊரில், உழைப்பால் உயர்ந்து நல்ல பெயரும், புகழும் உடைய குடும்பமாக திகழ்கிறது.

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்தவர் நடிகை ஆஷா சரத். தூங்காவனம் படத்திலும் நடித்திருந்தார்.மலையாள சினிமா நடிகையான இவர் தன் மகள் உத்தராவை நடிகையாக தான் நடிக்கும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்.

துபாயில் பொறியியல் படிப்பு முடித்து உத்தரா தற்போது மனோஜ் கனா இயக்கும் கெட்டா படத்தில் தன் அம்மாவுக்கு மகளாகவே நடிக்கிறாராம்.இயக்குனர் ஒரு நாள் தற்செயலாக உத்தராவை பார்த்த போது நடிக்க விருப்பமாக என கேட்டதும், உத்தரா மகிழ்ச்சியுடன் ஓகே சொல்லிவிட்டாராம். அதனால் இயக்குனரும் படத்தில் அவரை இணைத்துவிட்டாராம்.