விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மிகவும் பிரபலமானவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா. தொகுப்பாளினியாக அறிமுகமாகி சின்னத்திரையே கலக்கி கொண்டிருப்பவர். சமீபகாலமாக சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றது. முன்பு உள்ள சீரியல் போல் அழுகை, வில்லத்தனம் என்று இல்லாமல் தற்போது காதல், கல்லூரி, பிரெண்ட்ஷிப் என பல கதைகளை சீரியலில் கொண்டு வருவதால் சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்துள்ளது. எல்லாவித வயது ரசிகர்களையும் சீரியல் ஈர்த்துள்ளது.

யோகம் ரவி இயக்கிய யுவன்ராஜ் நேத்ரனுடன் தமிழ் தொலைக்காட்சி சீரியலான “மன்னன் மாகல்” படத்தில் சித்ரா தனது நடிப்பில் அறிமுகமானார். நடனம், நடிப்பு என பன்முக திறமை கொண்ட சித்ராவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம், மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறிய நடிகை. இந்த சீரியலுக்கு என்றே பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. சித்ராவுக்காகவே விரும்பி பார்ப்பார்கள்.
இவர் பல நாட்களாக வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள் என கூறிக்கொண்டே வந்தார். தற்போது அவர் சொன்னது போலவே அவருக்கான ஜோடியை தேடி கண்டுப்பிடித்துவிட்டார் சித்ரா. சித்ராவிற்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் கிடைத்துள்ளது, .ஹேமந்த் ஒரு தொழிலதிபராம். தற்போது அவர்களது புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகின்றது. இதோ அவர் புகைப்படம்.