பாண்டியன் ஸ்டோர் சித்ரா வருங்கால கணவருடன் எடுத்த போட்டோ ஷுட்!! வெளியான அழகிய புகைப்படம்

சினிமா நடிகைகளை தாண்டி சீரியல் நடிகைகளுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படி பல சீரியல் நாயகிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டதை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் சொல்ல வேண்டும் என்றால் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்துவரும் சித்ராவை கூறலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். தொகுப்பாளினியாக அறிமுகமாகி சின்னத்திரையே கலக்கி கொண்டிருப்பவர். இவருக்கும் கதிருக்கும் வைக்கப்படும் காதல் காட்சிகள் தான் சீரியலின் ஒரு ஹைலைட்.

இப்போது அதிகமாக இவர்களது காட்சிகளும் எடுக்கப்படுகிறது. ரசிகர்கள் முல்லை கதாபாத்திரத்தை எப்படி கொண்டாடுகிறார்களோ அப்படி சித்ராவும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி வருகிறார். பொதுவாகா மற்ற நடிகைகளைக் காட்டிலும் ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் சித்ராவின் சோஷியல் மீடியா பதிவுகளுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவியும்.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சித்ராவுக்கு தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் உறவினர்கள் சூழ நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட சித்ராவின் புகைப்படம் மட்டும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சித்ரா தனது வருங்கால கணவருடன் எடுத்த ஒரு புகைப்படம் இப்போது அவர் வெளியிட்டுள்ளார். இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்,

 

Leave a Reply

Your email address will not be published.