பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கிறாரா..! வெளியான சீமந்த புகைப்படங்கள் இதோ

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சமீபகாலமாக சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றது. முன்பு உள்ள சீரியல் போல் அழுகை, வில்லத்தனம் என்று இல்லாமல் தற்போது காதல், கல்லூரி, பிரெண்ட்ஷிப் என பல கதைகளை சீரியலில் கொண்டு வருவதால் சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்துள்ளது. எல்லாவித வயது ரசிகர்களையும் சீரியல் ஈர்த்துள்ளது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தனியாக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த நாடகத்தில் முல்லை, மீனா, தனம், ஜீவா, கதிர் என அதில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். மீனா கதாபாத்திரத்தில் வரும் ஹேமா வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்த சீரியலில் மீனா என்பவர் கர்ப்பமாக இருப்பதாக காட்சிகள் ஒளிபரப்பாகின.

ஆனால் நிஜத்திலேயே அவர் கர்ப்பமாக தான் உள்ளாராம். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளது. இந்த நேரத்தில் தான் நடிகை மீனாவின் சீமந்தம் மிகவும் சிம்பிளாக வீட்டிலேயே நடந்துள்ளது. அந்த புகைப்படங்களை மீனாவே தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவரும் கலந்துள்ளார். இதோ சீமந்த புகைப்படம்..

 

Leave a Reply

Your email address will not be published.