விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு தனியாக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. எல்லாவித வயது ரசிகர்களையும் சீரியல் ஈர்த்துள்ளது. அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை, மீனா, தனம், ஜீவா, கதிர் என அதில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம்.

மீனா கதாபாத்திரத்தில் வரும் ஹேமா வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இத்தொடரில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஹேமா ராஜ் கர்ப்பமாக இருந்தார். நிஜத்தில் உள்ளது போலவே சீரியலிலும் அவரது கேரக்டர் கர்ப்பமாக காட்டப்பட்டுள்ளது. மீனாவின் சீமந்தம் மிகவும் சிம்பிளாக வீட்டிலேயே நடந்துள்ளது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளைகாப்பு நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்ற அந்த எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. அவருக்கு மகன் பிறந்துள்ளானாம். அதனை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் ஹேமா தற்போது மார்டன் உடையில் செம ஸ்டைலிஷான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..
View this post on Instagram
Absolutely throwback…. Let’s meet wit an awesome photoshoot soon….????♥️