விஜய் தொலைகாட்சித்தியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமான மெகா சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் வரும் தனம், கதிர், முல்லை, ஜீவா, மீனா என அணைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அதிலும் முல்லை கதிர் கதாபாத்திரத்திற்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. இதில் முல்லையாக நடித்து வந்த நடிகை சித்ரா சில வாரங்களுக்கு முன் தீடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் அவரின் சீரியல் குழுவை மட்டுமல்லாமல், திரையுலகில் உள்ள பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன்பின், தற்போது அவருடைய கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் நடிகை காவ்யா, நடிக்க துவங்கியுள்ளார். இப்படி கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றி தான் பேச்சு அடிபடுகிறது. இதில் ஜீவா எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் வெங்கட்.
மேலும் இவர் இதற்கு முன் பல சீரியல்களில் நடித்துள்ளார். என்னதான் இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. மேலும் இந்நிலையில் நடிகர் வெங்கட்டின் மனைவி மற்றும் மகளின் அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.