பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய பிரபலத்திற்கு கொரோனா! ஷாக்கில் ரசிகர்கள்

விஜய் தொலைகாட்சித்தியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமான மெகா சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் வரும் தனம், கதிர், முல்லை, ஜீவா, மீனா என அணைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அதிலும் முல்லை கதிர் கதாபாத்திரத்திற்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. இதில் முல்லையாக நடித்து வந்த நடிகை சித்ரா சில வாரங்களுக்கு முன் தீடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் அவரின் சீரியல் குழுவை மட்டுமல்லாமல், திரையுலகில் உள்ள பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன்பின், தற்போது அவருடைய கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் நடிகை காவ்யா, நடிக்க துவங்கியுள்ளார். சமீபத்தில் தமிழில் போலவே தெலுங்கிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பிரியங்கா நாயுடு திருமணம் முடிந்தது.

இப்படி கடந்த சில நாட்களாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றி தான் பேச்சு அடிபடுகிறது. பின் சீரியலில் ஒரு நல்ல விஷயம் நடந்தது என அடுத்தடுத்து அந்த சீரியல் பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா என்ற பெயரில் நடிக்கும் வெங்கட் கொரோனாவால் பாதிக்கப்பட்டாராம். 20 நாட்கள் தனிமையில் இருந்ததாகவும் தற்போது குணமடைந்துவிட்டதாக அவரே இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.