தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று. ரசிகர்களுக்கு ஏற்றார் போல் விதவிதமாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், குக் வித கோமாளி, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் என கூறி கொண்டே இருக்கலாம்.
விஜய்யில் சில விஷயங்களை வழக்கமாக செய்வார்கள். அவர்களது தொலைக்காட்சி பிரபலங்களுக்கு நிஜத்தில் திருமணம் கூடினால் அதை அவர்களே கொண்டாடுவார்கள். அப்படி தான் இப்போது ஒரு பிரபலத்திற்கான திருமண நிகழ்ச்சி கொண்டாட்டம் நடந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ராவிற்கு, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களது திருமணம் நடக்கவுள்ள நிலையில் தொலைக்காட்சி கிராமத்து பொண்ணு என்று ஒரு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதில் சித்ரா தனது வருங்கால கணவர் பற்றி பேச அவரே திடீரென நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ளார். அவரை பார்த்து சித்ரா ஷாக்காக பார்க்க பின் இருவருக்கும் நலங்கு வைத்து கொண்டாடியுள்ளனர். இதோ அந்த நிகழ்ச்சியின் புரொமோ,
வாழ்த்துகள் சித்து! ?
கிராமத்து கொண்டாட்டம் – வரும் ஞாயிறு மதியம் 3:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #GramathuKondattam #VijayAyudhaPoojai #Vijayadasami #VijayTelevision pic.twitter.com/KUObyO43hL
— Vijay Television (@vijaytelevision) October 20, 2020