சமீபகாலமாக சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றது. முன்பு உள்ள சீரியல் போல் அழுகை, வில்லத்தனம் என்று இல்லாமல் தற்போது காதல், கல்லூரி, பிரெண்ட்ஷிப் என பல கதைகளை சீரியலில் கொண்டு வருவதால் சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்துள்ளது. எல்லாவித வயது ரசிகர்களையும் சீரியல் ஈர்த்துள்ளது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தனியாக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.
அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த நாடகத்தில் முல்லை, மீனா, தனம், ஜீவா, கதிர் என அதில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். அதிலும் இதில் நடித்திருக்கும் கதிர் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மிக மிக அதிகம் என்றே கூறலாம். பலருக்கு அவரின் நிஜ திருமணம் பற்றி தெரியாமல் இருந்தது. விஜய் தொலைக்காட்சியின் மிஸ்டர் அண்ட் மிஸ்செஸ் நிகழ்ச்சியில் குமரன் மற்றும் அவரது மனைவி பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி அவர்களுக்கு ஆடம்பரமாக மீண்டும் திருமணம் செய்து அசத்தியுள்ளது. இது குறித்த காணொளிகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.