பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லைக்கு பதில் நடிக்கப்போவது இவரா? வெளி வந்த தகவல்..!!

முன்பெல்லாம் சினிமா நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர்களுக்கே பேன்ஸ் கிளப் வைத்துவிட்டார்கள். அந்த அளவுக்கு சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் ரீச் ஆகி இருக்கிறது.

அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து பேமஸ் ஆனவர் சித்ரா. இவர் முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தார். அங்கு இருந்துதான் சீரியலில் நடிக்க வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை பாத்திரத்தில் நடித்துவந்த சித்ராவின் ‘கிராமத்து மொழிநடைப் பேச்சு’ அனைவருக்கும் ரொம்பப் பிடிக்கும். தமிழகம் முழுவதுமே பரவலாக சித்ராவுக்கு ரசிகர் வட்டம் உண்டு. இந்நிலையில் சித்ரா தி டீரென நட்சத்திர விடுதி ஒன்றில் த ற்கொ லை செய்துகொண்ட ச ம்பவம் தமிழகத்தையே உ லுக்கியது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை சித்ரா கேரக்டருக்காகவே பார்த்தவர்கள் அதிகம். சித்ராவின் ம றைவைத் தொடர்ந்து அவர் நடித்த முல்லை பாத்திரத்துக்கு ஆள் தேடும் பணியில் இயக்குநர் தீ விரமாக ஈடுபட்டுள்ளார். அந்தவகையில் நெஞ்சம் ம றப்பதில்லை, ஆயுத எழுத்து ஆகிய சீரியல்களில் நடித்த சரண்யா திரிவேதி அல்லது காயத்ரி இந்தப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சின்னத்திரை வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *