பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா தொற்றுக்கு ஆளான பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் மிகவும் மோசம் அடைந்தது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நுரையீரல் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர, உயிர்காக்கும் உபகரணங்கள் வழியாக, ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. அவர் நினைவுடனும் சிறிய அளவிலான பிசியோதெராப்பியும் பெற்று வருகிறார். பல்நோக்கு மருத்துவ குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றி அவருடைய மகன் சரண் தகவலை பதிவிட்டுள்ளார். எஸ்.பி.பி.யின் உடல் நிலை தொடர்ந்து சீரான முன்னேற்றத்தில் உள்ளது. இயன்முறை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. திரவ உணவுகளை உட்கொள்கிறார். விரைவில் குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
— S. P. Charan (@charanproducer) September 22, 2020