பாக்ஸிங்கில் களமிறங்கிய ஆல்யா! உடல்எடையை எப்படி குறைத்தார் தெரியுமா? காணொளி இதோ…

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஆலியா. அதே சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆலியா சிறுது காலம் சினிமாவில் நடிக்காமல் இடைவெளி விட்டிருந்தார். திருமணத்துக்கு பிறகு சஞ்சீவ் கார்த்திக் ‘காற்றின் மொழி’ சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்தார். ஆல்யா மானசா நடிப்பில் ராஜா ராணி 2 சீரியல் உருவாக இருக்கிறது.

நடிகை ஆலியா மானசா குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். மிக விரைவாக உடல் எடையை குறைத்து ஒல்லியாக ஆகிவிட்டார். பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பின்பு உடல் எடை அதிகரித்து அதனை குறைப்பதற்கு மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வதை நாம் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

மேலும் உடற்பயிற்சி செய்வதற்கு கூட பலரும் பயந்து வருவார்கள். இந்நிலையில் நடிகை ஆல்யா பிரசவத்திற்கு பின்பு உடல்எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பதை உடற்பயிற்சியின் மூலம் வெளிப்படுத்துள்ளார். பிரசவித்த தாய்மார்கள் எம்மாதிரியான உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் காணொளியில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published.