பாக்கியலட்சுமி சீரியல் நடிகையா இது? ஜீன்ஸ் ஷர்ட் போட்டு எவ்வளவு மாடர்னா இருக்காங்க!! புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஸ்ரீமோயி’ என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரை ‘டேவிட்’ என்பவர் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருடன் வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் போன்ற பலர் நடிக்கிறார்கள்.

இந்த தொடரின் கதையில் இல்லத்தரசி என்பவர் அம்மாவாக, மனைவியாக, மருமகளாக போன்ற பல பொறுப்புகளில் வகிக்கின்றார். ஆனால் அவர் படும் பாடுகள் என்ன சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள். பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை.

விஜய் தொலைக்காட்சியில் லாக்டவுன் முன்பே தொடங்கிய ஒரு சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்ப தலைவியின் கதையாக நகர்கிறது. இப்போது அந்த சீரியலுக்கு மக்களிடம் கொஞ்சம் ரீச் கிடைத்துள்ளது என்றே கூறலாம். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது பாக்கியலட்சுமி என்ற பெயரில் நடிப்பவர் சுசித்ரா. புடவையில் மட்டுமே அவரை பார்த்த சீரியல் ரசிகர்கள் அவரது மாடர்ன் உடை புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரா அது என வியந்து பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.