இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கும் மிகப் பெரிய புகழ்பெற்ற படம் பாகுபலி. இதில் நடித்த நடிகர் நடிகைகளும் மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் பிரபலமான நிலையில், இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்து இருந்தனர். தெலுங்கு சினிமாவின் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் பாகுபலி. இது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியானது.

இந்த படத்தின் முதல் பாகத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ், பிரபாஸ் பின்புறத்திலிருந்து வாலால் கொலை செய்வதுடன் படம் முடிவு பெறும். அதன் பிறகு இரண்டாம் பாகத்தில் கட்டப்பா ஏன் பிரபாஸை கொலை செய்தார் என்பதை நோக்கி கதை நகரும் இதன் மூலமாக கட்டப்பா கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.
இதற்கு முன்பு முதலில் இந்த படத்தின் இயக்குனர் ராஜமவுலி பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தைவை கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அப்போது சிறையில் இருந்ததால் சத்யராஜை நடிக்க ஒப்புக் கொண்டாராம். தற்போது இந்த கதாபாத்திரத்திற்கு பிறகு இவர் இவருக்கு பதில் வேறு எவரும் நடித்து இருந்தல் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்திருக்கும். அந்த அளவிற்கு இவர் நடிப்பு சிறப்பாக இருக்கும்.