தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். முறை மாப்பிளை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகளாக போராடி பல தோல்விகளை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானார்.
அருண்விஜய் தொடர்ந்து வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனையும் புரிந்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பில் அசத்தி ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சி படுத்தி வரும் அருண் விஜய் சில நாட்களுக்கு முன்பு முறுக்கு மீசையுடன் அசத்தலான கட்டுடல் என அனைவரும் மிரளும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்பொழுது மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தனது வீட்டிற்கு புதிதாக விநாயகர் சிலையை வாங்கி வந்த அருண் விஜய் அதை பாகுபலியை போல அலேக்காக தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில் அந்தப் புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.