பாகிஸ்தான் டீ கடையில் அபிநந்தனின் போஸ்டர்! என்ன எழுதியிருக்கு தெரியுமா?

பாகிஸ்தானில் இருக்கும் டீ கடை ஒன்றில் அபிநந்தனின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்திய இந்தியா தீவிரவாத முகாம்களை அழித்தது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிய நிலையில் இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். அவர் சிறைபிடிக்கப்பட்டிருந்த போது பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோவில், டீ அருந்திக் கொண்டிருக்கும் அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலானது, இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சியில் இருக்கும் டீ கடை ஒன்றில் அபிநந்தனின் படத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அதில், “இந்த டீ எதிரியை கூட நண்பனாக்கும்” என எழுதப்பட்டுள்ளது. தற்போது இந்த படம் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.