உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. மும்பையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு உலகம் முழுக்க 1.66 கோடி மக்களை பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 14.82 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 33 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்பு நிறுத்தம் சினிமா, சீரியல் வட்டாரங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர் சிலர். சிலர் கொரோனா அல்லாமல் சினிமா பிரபலங்கள் சிலர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது பாலிவுட் சினிமாவின் பழம் பெரும் நடிகை கும்கும் காலமாகியுள்ளார்.
அவருக்கு வயது 86. 115க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் 1954 ல் ஆர் பார் என்ற படத்தில் அறிமுகமானார். அவர் நடித்திருந்த கபி ஆர் கபி பார் பாடல் சூப்பர் ஹிட் ரகம் என்பதை மறந்துவிடமுடியாது. மிஸ்டர் எக்ஸ் இன் பாம்பே, சன் ஆஃப் இந்தியா, மதர் இந்தியா, உஜாலா, கோகினூர் ஆகிர படங்களின் மூலம் மக்கள் மனதில் ஆழப்பதிந்தவர். 1973 ம் வருடத்திற்கு பின் அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்களைத் தெரிவித்து வருகின்றனர்.