பள்ளி மாணவியுடன் காதல்: ஒரு மாதம் கழித்து எலும்பு கூடாக கிடைத்த 17 வயது மகன்… காரணம் தெரிந்து கதறிய பெற்றோர்!

சிவகாசி மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் காணாமல் போன 17 வயது மகன் எலும்புகூடாக கிடந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடலிங்கம் என்ற சிறுவன் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளான். இதனை அறிந்த பெற்றோர் கூடலிங்கத்தை அடித்துள்ளனர்.இந்நிலையில் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கூடலிங்கம் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

காட்டு பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கூடலிங்கம் எலும்பு கூடாக மீட்கப்பட்டுள்ளர். சம்பவ இடத்தை தடவியல்துறை நிபுணர்களும், மோப்பநாய் மூலமாகவும் விசாரணை மேற்கொண்ட போலீசார், கூடலிங்கம் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பதை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.