சமீபகாலமாக சினிமா நடிகைகளை போலவே சீரியல் நடிகைகள், செய்தி வசிப்பவர்கள், டிக் டாக் மூலம் பிரபலமானவர்கள் தான் தற்போது அதிகம் என்றே சொல்லலாம். அப்படிபட்டவர்களில் ஒருவர் அனிதா சம்பத். பாலிமர் நியூஸ், நியூஸ் 7 தமிழ், சன் நியூஸ் போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் வணக்கம் தமிழா, வானிலை அறிக்கை, நியூஸ் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார் அனிதா சம்பத்.

குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்தார் இவர். அவருக்காக செய்தி பார்க்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். தளபதி விஜய்யின் சர்க்கார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா மற்றும் 2.௦, துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா மற்றும் சூர்யாவின் காப்பான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபா என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அனிதா சம்பத் பள்ளி பருவத்தில் ஆசிரியர் தினம் அன்று எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்தவர்கள் பள்ளி பருவத்தில் எப்படி உள்ளார் என சரியாக அவரது முகம் தெரியாத புகைப்படத்தையும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்,