பளபளவென பஞ்சு மிட்டாய் ரவிக்கையில் மின்னும் வாணி போஜன்..!! புகைப்படம் உள்ளே…

சன் டிவி தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். சின்னத்திரை நடிகை மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் இவர் பணியாற்றி வருகிறார். தெய்வமகள் சீரியலில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் வாணிபோஜன். இதன் மூலம் இவர் சத்யா கதாபாத்திரமாகவே பலர் மக்கள் மனதில் வாழ்ந்து வந்தார்.

இந்த சீரியல் முடிந்த பிறகு ஒருசில நிகழ்ச்சிகளில் இவர் நடுவராக பங்கேற்று வந்தார். அதன் பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே என்ற படத்தில் மிகவும் நேர்த்தியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவரை செல்லமாக மீரா அக்கா என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் அவர்களும் இணைந்து நடிக்கப் போவதாக சில செய்திகள் வெளியாகின.

வீட்டிலிருந்தபடியே பொழுதை கழித்து வரும் வாணிபோஜன் அவ்வப்போது தனது பழைய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அதுபோல தற்போதோ ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு பஞ்சுமிட்டாய் ரவிக்கையில் பளபளவென மின்னும் சேலையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்….

Leave a Reply

Your email address will not be published.