தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். தல படம் வந்தாலே தியேட்டரே திருவிழா கோலமாகும். இவரின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதுமே மாஸ்ஸான வரவேற்பு உண்டு. அந்த வகையில் சென்ற வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே மாஸ்ஸான வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வைத்தார். இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தை அஜித்தை வைத்து இயக்கி வருகிறார். கொரோனா தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் கிழ் முறையான நடைமுறையில் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தல அஜித் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வரலாறு, இப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. மேலும் தற்போது பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது, இதனால் தல அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சகத்தில் உள்ளனர்.
Tamil Film #Varalaru (God Father) is now streaming on Amazon Prime. pic.twitter.com/2szWSWWfGk
— LetsOTT GLOBAL (@LetsOTT) October 13, 2020