பல லட்சம் பேரை வியக்க வைத்த ஏழை சிறுவனின் செயல்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை என அவ்வைப்பிராட்டி சொல்லுவார். குழந்தைப் பருவத்தில் கஷ்டத்தின் காரணமாக வேலைக்குச் செல்லும்போது படிப்பை பாதியிலேயே நிறுத்தும் சூழ்நிலை ஏற்படும். இதனால் எவ்வளவு காலம் ஆனாலும் வாழ்வில் கல்வி எட்டாக்கனியாகி விடும். ஆனால் இந்த கஷ்ட சூழலை சமாளித்து வாழ்வில் ஜெயித்தவர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. இங்கேயும் அப்படித்தான் ஒரு சிறுவன் கேரளத்தில் 5 நிமிடத்திலேயே அழகான பூக்கூடை செய்து கொடுத்து விற்று வருகிறான். இந்த சிறுவனின் திறமை பலரையும் ஆச்சர்யப்படுத்திவருகிறது. இந்தச் சிறுவனின் இந்த அழகான வேலைப்பாடு பலரையும் கவர, மலையாளி ஒருவர் இந்த சிறுவனின் உழைப்பையும், அவனது வேகத்தையும் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.