தென்னிந்திய திரையுலகில் 80-90 களில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1980ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக அவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டார்.

தன் கணவர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் குஷ்பு. தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார். அண்மையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவியில் இருந்து வந்த குஷ்பு அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும், மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் குஷ்பூவா இது என அவரின் அழகை கண்டு வியந்து வருகின்றனர். இந்த வயதிலும் இப்படியொரு உடையில் போஸா எனவும் சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.