தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் காமெடி நடிகர் சூரி. சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் சுந்தர பாண்டியன், வருத்தப்படாதா வாலிபர் சங்கம், பாண்டிய நாடு, ஜில்லா, ரஜினி முருகன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.

தற்போது இவரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் அளவிற்கு வளந்துவிட்டார் காமெடி நடிகர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிக்கவிருக்கும் படத்திற்காக சீமராஜா படத்திற்கு பிறகு மீண்டும் சிக்ஸ் பேக் வைத்து தனது உடலை மிகவும் ஃபிட்டாக மாற்றியுள்ளார் சூரி. இந்நிலையில் இவர் தனக்கு இரண்டு பேர் நிலம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
வீரதீர சூரன் பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் என்பவர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். வீரதீர சூரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ.40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர். அதோடு ரமேஷ் என்பவர் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 2.70 கோடி மோசடி செய்துள்ளாராம். ரமேஷ் பிரபல நடிகரான விஷ்ணு விஷாலின் தந்தை ஆவார்.