பல ஆண்களுடன் பழக்கம்.. கொலை செய்யப்பட்ட நடிகை சந்தியா! கணவரே கொன்றது அம்பலம்,,!! சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் குப்பை கிடங்கில் வெட்டப்பட்டு கிடந்த பெண் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 21ம் திகதி பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் பெண்ணின் வெட்டப்பட்ட கை, கால்கள் கிடந்தன. கைப்பகுதியில் பச்சை குத்தப்பட்டிருந்த நிலையில், உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து கை, கால்களை கைப்பற்றிய பொலிசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த குப்பை கோடம்பாக்கம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பகுதியில் காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தியதில், துப்பு துலங்கியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் சந்தியா என்பதும், கணவர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணனுடன் சேர்ந்து ஜாபர்கான்பேட்டையில் சேர்ந்து வசித்ததும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணனிடம் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், அவரே மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இவர் சமீபத்தில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டதும், 2015ம் ஆண்டு ”காதல் இலவசம்” என்ற படத்தை இயக்கியதும் தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட சந்தியாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததால், பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

ஆனால் இதை சந்தியா கண்டுகொள்ளாததால் உடலை துண்டு துண்டாகி வெட்டி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனைதொடர்ந்து அவரது உடலை எங்கு வீசினார் என்பது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.