பரீட்சையில் பாஸ் ஆகனுமா? படுக்கைக்கு வா! மாணவிக்கு பேராசிரியர் அழைப்பு! பின்பு அரங்கேறிய விபரீதம்

மாணவர்களைல் உயர் ஒழுக்கங்களை உடையவர்களாக்க வழிநடத்திய நல்லாசிரியர்கள் இருந்த நாடுதான் இந்தியா. எனினும் தற்போதைய கால மாறுதலும் சமூக சீர்கேடுகளும் பல்வேறு துறைகளில் கேடுகெட்ட புல்லுருவிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஆசிரியத் துறை மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு எதிராக ஆசிரியர்கள் பாலியல் தாக்குதல் நடத்தும் செய்திகள்தான் பஞ்சத்துக்கு இடமில்லாமல் வந்துகொண்டிருக்கின்றன.  அந்த வரிசையில் இதோ ஒன்று. தெற்கு மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற கல்லூரி ஒன்றில் 19 வயது மாணவி ஒருவர் பி.எஸ்.சி. படித்து வருகிறார்.

குறிப்பிட்ட சில காரணங்களால் அந்த மாணவியால் வேதியியல் செயல் முறை வகுப்பில் பங்கேற்க முடியாத நிலையில் அந்த மாணவியின் வருகைப் பதிவு மோசமான நிலையில் இருந்தது. இதையடுத்து தனது பேராசிரியரை அணுகிய அந்தப் பெண் தனது மோசமான வருகைப் பதிவைக் காட்டி தான் தேர்வு எழுதுவதை தடுத்துவிட வேண்டாம் என கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். பசுத் தோல் போர்த்திய புலி போல், கல்வியாளர் வேடத்தில் இருந்த காமுகனுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாகத் தெரிந்தது.

உடனடியாக அந்த மாணவியிடம் தனது பேரத்தைத் தொடங்கிய அந்த நபர் தனக்கு இணங்கினால் வருகைப் பதிவு நிலையை கண்டுகொள்ளாமல் விட்டு தேர்வு எழுத அனுமதிப்பதாகவும் செயல்முறைத் தேர்வில் மட்டுமன்றி எழுத்துத் தேர்விலும் வெற்றி பெறச் செய்வதாகக் கூறி மாணவிக்கு தூண்டில் போட்டார்.

கல்வி என்பதே மனிதத்தை மேம்படுத்திக்கொள்ளத்தான் என்ற நிலையில் அதையே காரணமாகக் கொண்டு தன்னை சிறுமைப்படுத்திக் கொள்ள விரும்பாத அந்த மாணவி நேராக காவல் நிலையத்துக்குச் சென்றார். அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் பெண்ணின் மாண்பை சீர்குலைத்தல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.