பத்ம விருதுகளை பெரும் தமிழர்கள்..! யார் யாருக்கு தெரியுமா? வெளியான முழு பட்டியல்

பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ போன்ற நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் மார்ச் / ஏப்ரல் மாதத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சம்பிரதாய விழாவில், குடியரசுத் தலைவர் இந்த விருதுகளை வழங்குவார். இந்த ஆண்டு ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 10 பேருக்கு பத்ம பூஷணும், 102 பேருக்கு பத்ம ஸ்ரீயும் வழங்கப்படுகின்றன. பல்வேறு துறைகளை சேர்ந்த தமிழகத்தின் 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

பத்ம விருதுகள் வாங்கும் தமிழர்கள் பட்டியல்: மறைந்த எஸ். பி. பாலசுப்ரமணியம் – கலை – பத்ம விபூஷண், பி. அனிதா – விளையாட்டு – பத்ம ஸ்ரீ, சுப்பு ஆறுமுகம் – கலை – பத்ம ஸ்ரீ, சாலமன் பாப்பையா – இலக்கியம் மற்றும் கல்வி- பத்திரிகை துறை – பத்ம ஸ்ரீ, பாப்பம்மாள் – விவசாயம் – பத்ம ஸ்ரீ, பம்பாய் ஜெய ஸ்ரீ ராம்நாத் – பத்ம ஸ்ரீ, மறைந்த கே சி சிவசங்கர் – கலை – பத்ம ஸ்ரீ, மராச்சி சுப்புராமன் – சமூக பணி – பத்ம ஸ்ரீ, மறைந்த பி சுப்பிரமணியன் – வர்த்தகம் மற்றும் தொழில் – பத்ம ஸ்ரீ, மறைந்த டாக்டர். திருவேங்கடம் வீரராகவன் – மருத்துவம் – பத்ம ஸ்ரீ, ஸ்ரீதர் வேம்பு – வர்த்தகம் மற்றும் தொழில் – பத்ம ஸ்ரீ

மிக அரிய மற்றும் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம விபூஷன்’ விருதும், மிக உயரிய வகையில் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம பூஷன்’ விருதும், எந்தத் துறையிலும் தலைசிறந்த பணியாற்றியவர்களுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.