பட வாய்ப்புகள் இல்லாமல் போன ‘கோ’ பட நடிகை..! இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் புது முகங்களின் வர த்து நாளுக்கு நாள் அதிகமானாலும், பழைய நடிகர் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய் விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும் இந்நிலையில், கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா. இவர் நடிகை ராதாவின் மகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், “கோ” படத்திற்கு பின்னர் அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களில் நடித்த இவர், சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.நடிகை கார்த்திகா கடைசியாக ‘வா டீல்’ படத்தில் நடித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக, இதுவரை ரிலீசாகாமல் உள்ளது.

அதன்பிறகு, அவருக்கு பட வாய்ப்புகள் பெரிதும் இல்லை. இதனால் 2017-ல் ஆரம் என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்தார். தொடர்ந்து டிவி தொடர்களில் நடிக்கவும் அழைப்பு வரவில்லை. தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி தனது தந்தை நடத்தும் ஓட்டல் தொழிலை கவனிக்க கார்த்திகா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.