படப்பிடிப்பு இல்லாததால் மதுமிதா என்ன செய்துள்ளார் தெரியுமா? ரசிகர்களிடமிருந்து குவியும் பாராட்டுகள்..!

ராஜேஷ் இயக்கி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிகர் சந்தனமுடன் இணைந்து ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா. தற்போது லாக்டவுன் நேரத்தில் தான் கற்றுக்கொண்ட இரண்டு விஷயங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று காவிரி பிரச்சனை குறித்து பேசியதால் சக ஹவுஸ் மேட்டுகளால் கார்னர் செய்யப்பட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிகளை மீறியதாக கூறி நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படங்கள் குறித்த எந்த அறிவிப்பையும் அவர் விடவில்லை. இந்நிலையில் இந்த லாக்டவுன் நேரத்தில் இருசக்கர வாகனம் ஓட்டவும், கார் ஓட்டவும் கற்றுக்கொண்டுள்ளதாக டிவிட்டர் பக்கத்தில் போட்டோக்களுடன் தெரிவித்துள்ளார்.

அதில் படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன். எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மதுமிதாவா இது என்று இன்ப அதிர்ச்சியடைந்துள்ளதுடன், அவரின் முயற்சியையும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.