படபிடிப்பு முடங்கியதால் இந்த தொழில் செய்து வரும் பிரபல நடிகை…என்ன செய்கிறார் தெரியுமா?

வரலட்சுமி சரத்குமார் ஒரு நடிகை, அவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த நடனக் கலைஞராக சித்தரிக்கும் போடா போடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சினிமாவில் மிகப் பிரபலமான நடிகைகளில் வரலட்சுமி சரத்குமாரும் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ரசிகர்களிடம் திரைப்படத்தில் தனது வெளிப்படையான பேச்சின் மூலம் ரசிகர்களை எளிதில் கவர்ந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் வகையில் வரலட்சுமி தன்னை எப்போதம் பிரபலமாகவே வைத்துள்ளார்.

அந்தவகையில் மக்களுக்கு பல நிவாரண உதவிகளை செய்து வருகிறார். மேலும் தனது தனிப்பட்ட அறக்கட்டளையின் மூலமாக மக்கள் நலன் கருதி பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இதனால் மக்களிடையே வரலட்சுமி மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டு வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது வரலட்சுமி ஒரு தொழிலை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது சிறு காலத்திற்கு முன்பாக வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் தனக்கு பொழுதுபோக்காக இருக்கட்டும் என ஒரு பேங்கிங் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

தற்போது பொழுதுபோக்காக திறந்த இந்த நிறுவனமானது தற்போது முழு வேலையும் அதிலேயே காட்ட ஆரம்பித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் தற்போது இவர் 100 ஆர்டர்கள் மேல் முடித்து தந்து விட்டாராம், தன் மீது நம்பிக்கை வைத்து ஆர்டர்களை கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார், மேலும் மற்றொரு உத்தரவையும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.