பச்சை மிளகாயில் இவ்வளவு நன்மைகளா? தினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களில் ஓன்று பச்சை மிளகாய். இதனை பலர் காரமாக இருக்கின்றது என்று ஒதுக்குவது உண்டு. பச்சை மிளகாயை தினமும் ஒன்று சாப்பிடுவதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் என்னவென்பதைக் காண்போம். பச்சை மிளகாய் எடையை இழக்க நினைப்போருக்கு ஒரு அற்புதமான உணவுப் பொருள். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவு மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் போது கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையை இழக்கச் செய்கின்றன. பச்சை மிளகாயில் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது இதய செயல்பாட்டை முறையாக பராமரிக்க உதவுகிறது.

பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. இது சவ்வுகளிடையே இரத்த ஓட்டத்தைத் தூண்டி, உடலில் உற்பத்தியாகும் சளியை இளகச் செய்கிறது. பச்சை மிளகாயில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மற்றும் பீட்டா-கரோட்டின் உள்ளது. ஆனால் பச்சை மிளகாயை ஒரு டப்பாவில் போட்டு மூடி, குளிர்ச்சியான இடத்தில் வைத்தால் தான், அதில் உள்ள வைட்டமின் சி நீடித்திருக்கும். சர்க்கரை நோயைக் கொண்டவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்கலாம்.

பக்க விளைவுகள்
பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிட்டால், அது கடுமையான எரிச்சலுடன் கூடிய வலியை உண்டாக்குவதோடு, உடலினுள் அழற்சி/காயங்களையும் உண்டாக்கும். பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால், அது சிலருக்கு அடிவயிற்று வலி அல்லது வலிமிக்க வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடும். நீங்கள் பச்சை மிளகாயால் செரிமான பிரச்சனையை சந்தித்து, தொடர்ந்து பச்சை மிளகாய் சேர்த்த உணவை உண்ணும் போது, அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. இந்த கேப்சைசின் அளவுக்கு அதிகமாக உடலினுள் சென்றால், அது சரும அழற்சியை உண்டாக்கும். எனவே பச்சை மிளகாயை அளவாக சாப்பிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.