உணவுக்கு நிறமும் சுவையும் கொடுக்க கூடிய மஞ்சள் எல்லோருடைய சமையலறையிலும் முதன்மையாக இடம்பிடித்துள்ள உணவு பொருளும் கூட. மஞ்சள் அதிகமாக பயன்படுத்தும் போது உண்டாகும் பக்கவிளைவுகள் குறித்து அறிந்துகொள்வோம். கைவைத்தியம் முதல் அல்சைமர் வரை பல நோய்களுக்கு மஞ்சள் நன்மை தரக்கூடியது. அதிகப்படியான மஞ்சள் வயிற்றின் செரிமானத்தை பாதிக்க செய்யும். புற்றுநோய் தாக்கம் இருப்பவர்கள் மஞ்சளை எடுத்துகொள்ளும் போது சிலர் இதை தவிர்ப்பதாக கூறினார்கள்.
ஏனெனில் அவர்களது செரிமானம் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்ததுதான். மஞ்சள் இரப்பையில் அமில சுரப்பை அதிகரிக்க செய்கிறது. வயிற்றூ பிடிப்பு, பிடிப்புகளுக்கு வழிவகுக்க செய்கிறது. இதற்கான காரணம் சரியாக கண்டறியப்படவில்லை. ஆனால் மஞ்சள் ரத்தத்தை மெலிதாக்க செய்கிறது. மஞ்சள் உடல் சுத்திகரிப்பின் போது ரத்தம் மெலிதல் உண்டாகிறது. மஞ்சள் அதிகமாக எடுக்கும் போது அது சிறுநீரக கற்களை உருவாக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறது. மஞ்சளில் இருக்கும் ஆக்சலேட்டுகள் கால்சியத்துடன் இணைந்து கால்சியம் ஆக்சலேட் உருவாக்குகிறது.
இது கரையாத தன்மையை கொண்டிருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாவதும் தவிர்க்க முடியாததாகிறது. மஞ்சளில் 2% ஆக்சலேட் உள்ளதால் அதிகமாக பயன்படுத்த கூடாது. மஞ்சள் உடல் இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுத்து இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கலாம். மஞ்சள் தேவையான அளவு எடுத்துகொள்ளும் போது இத்தகைய பிரச்சனை உண்டாவதில்லை, அதே நேரம் ஏற்கனவே இரும்புச்சத்து குறைபாடு பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் மஞ்சள் அதிகமாக சேர்க்கும் போது அது சத்து குறைபாட்டை அதிகரிக்க செய்துவிடவும் வாய்ப்புண்டு.