நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனிதாவின் கணவர் பீட்டர் பால்.. வெளியான தகவல்…

நடிகை வனிதா மற்றும் அனிமேஷன் இயக்குநர் பீட்டர்பால் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். வனிதாவின் மூன்றாம் திருமணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 1995-ம் ஆண்டு விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதனைத் தொடர்ந்து நடித்த படங்கள் யாவும் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்பதால் திரையுலகிலிருந்து விலகினார்.

2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை 19 வயதில் திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2007-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணமும் 2010-ல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பீட்டர் பால் என்பவரை வனிதா மூன்றாம் திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமணம் குறித்து பலரும் கருது தெரிவித்து வந்தனர். அதனை பொருட்படுத்தாமல் நடிகை வனிதா தனது யூடுப் பக்கத்தில் சமையல் விடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் பீட்டர் பாலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.