நீ என்ன பத்தினியா ..??”பிரபு, சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா கஸ்தூரி?”.

“என்னய்யா இது.. ‘பல்லாண்டு வாழ்க’ படத்துல வாத்தியாரு, லதாவை தடவுனதைவிட அதிகமா தடவுறாங்க. #CSK 81-3 (14 Overs)” என்று ட்விட் போட்ட கஸ்தூரிக்கு, ’இவரை நடிகர்கள் தடவுனதையே போட்டிருக்கலாமே’ என்று செருப்படி பதில் கொடுத்திருக்கிறார் நடிகை லதா ’அண்ணே ஒரு விளம்பரம்’ என்று கவுண்டமணியைப் பார்த்து தலையைச் சொறியும் செந்தில் ரேஞ்சுக்கு இறங்கி பப்ளிசிட்டிக்காக சமீபகாலங்களில் தரை மட்டத்துக்கு இறங்கிவர ஆரம்பித்திருக்கிறார் நடிகை கஸ்தூரி. நேற்றைய லதா-எம்.ஜி.ஆர் தடவல் ட்விட் கஸ்தூரி ஒரு எச்சம் என்பதைக் காட்டும் விரசத்தின் உச்சம். அவர் எழுதிய டிவிட்டர் பக்கத்தில் அவருக்குக் கண்டனம் தெரிவித்தவர்கள் கஸ்தூரி இதுவரையிலும் நடித்திருந்த திரைப்படங்களில் இருந்து மேற்கோள்களையும் புகைப்படங்களையும் காட்டி “மொதல்ல நீ யோக்கியமா..? இதெல்லாம் என்ன..? தடவுறது இல்லையா..?

பிரபு,சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா” என்றெல்லாம் சொல்லி திட்டித் தீர்த்து வருகிறார்கள். இந்த கமெண்ட்கள் எல்லாம் எதிர்பார்த்ததுதானே என்று கள்ளச்சிரிப்பு சிரித்தபடி வீட்டில் அடுத்த ட்விட்டுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார் கஸ்தூரி. அந்த ட்விட் குறித்து நடிகை லதா என்ன சொல்கிறார் என்று தொடர்பு கொண்டபோது ஆத்திரத்தின் உச்சியில் இருந்தார் லதா. “நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே..? அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்..? அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே..

இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா..? ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி..” என்று கோபத்தோடு சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published.