நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தங்கையுடன் புகைப்படத்தை வெளியிட்ட லொஸ்லியா! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் நடிகை லொஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம்
நடிகை லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

கனடாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த லொஸ்லியாவின் தந்தையின் உடல் கொரோனா பிரச்சினை காரணமாக ஒரு மாதம் கழித்து அவரது தாய்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி இருந்தனர். தனது தந்தையின் இழப்பால் பெரும் சோகத்தில் இருந்து வந்தார் லாஸ்லியா. இந்நிலையில் தனது தந்தையின் இறப்பிற்கு பின்னர் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நம்பிக்கை என்று நேற்யை தினத்தில் லொஸ்லியா புகைப்படம் ஒன்றினை பதிவிட்டிருந்தார். தற்போது லொஸ்லியா தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது. இதனை அவதானித்த ரசிகர்கள் லொஸ்லியா இந்தியாவிற்கு வந்துவிட்டாரா என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.