நீண்ட நாட்களுக்கு பிறகு தோழிகளை சந்தித்த நடிகை நதியா.. எப்படி இருக்காங்க தெரியமா? அப்பப்பா செம அழகு!

1980களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை நதியா, தன்னுடைய தோழிகளை சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து கலக்கியவர்.

1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். இவருக்கு இரண்டு அழகான பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் ஜெயம் ரவியின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார், தொடர்ந்து அக்கா, அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மும்பையில் தன்னுடைய தோழிகளான குஷ்பு மற்றும் பூனம் தில்லானை சந்தித்துள்ளார். இதை பகிர்ந்து கொண்ட நதியா, தன்னுடைய நெருங்கிய தோழிகளை சந்தித்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைபடத்தை பார்க்கும்பொழுது நதியாவுக்கு வ ய தே ஆகாதா என பொ றா மை ப டும் அளவுக்கு அழகாகவும், இளமையாகவும் தெரிகிறார்..

Leave a Reply

Your email address will not be published.